Reading Time: < 1 minute
தேவையானவை:
இறால் – 1/4கிலோ
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1
பூண்டு – 6
கொத்துமல்லித் தழை – சிறதளவு
காரத்தூள் – 2டாஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/2டாஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 1துண்டு
ஏலக்காய் – 2
பால் – 1/2கப்
நெய் – 50கிராம்
செய்முறை:
- முதலில் பாத்திரத்தில் இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
- பின்பு கரம்மசாலாத்தூள்,இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை நீள, நீளமாக நறுக்கவும்.
- ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து வாசனை வருகையில் வெங்காயம் கரம் மசாலத்தூள் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், இறால் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.
- பிறகு இறால் பொன்னிறமாக வதங்கியதும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். இறால் கிச்சடி தயார்.