மாண்ட்ரீல் நகரின் புறநகர் பகுதி மேயர் ஒருவர் முன்னாள் அரசியவாதி ஒருவரால் தாம் சீரழிக்கப்பட்டதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் Parti Québécois கட்சி சட்டமன்ற உறுப்பினரான Harold LeBel என்பவரால் தாம் சீரழிக்கப்பட்டதாக மேயர் Catherine Fournier தெரிவித்துள்ளார். 2017ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் Harold LeBel தற்போது 8 மாத சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
Parti Québécois கட்சியில் இணைந்து சிறப்பாக பணியாற்றி வந்த Catherine Fournier டிசம்பர் 2016ல் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். ஆனால் 2019 மார்ச் மாதம் கட்சியில் இருந்து விலகிய Catherine Fournier பின்னர் தனியாக செயல்பட்டார்.
இந்த நிலையில் கியூபெக் மாகாணத்தின் Longueuil பகுதி மேயராக 2021 நவம்பர் மாதம் தெரிவான பின்னர் மாகாண அரசியலில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் தான் தமக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் வெளிப்படையாக தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமது அனுபவம் சிலருக்கேனும் படிப்பினையாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் Catherine Fournier குறிப்பிட்டுள்ளார். பொதுவாக பாதிக்கப்படுவர்களின் அடையாளங்கள் நீதிமன்றத்தால் பாதுகாக்கப்படும், ஆனால் மார்ச் மாதம் கியூபெக் உச்ச நீதிமன்றத்தை நாடிய அவர், செய்தி வெளியிடுவதற்கான தடையை நீக்க கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்தே, Catherine Fournier தமது அனுபவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். 2014 முதல் 2022 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த Harold LeBel கடந்த டிசம்பர் 2020ல் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2017ல் அவரது குடியிருப்பில் வைத்து அப்போதைய Parti Québécois உறுப்பினரான Catherine Fournier ஐ அவர் சீரழித்துள்ளார். இந்த நிலையில் 60 வயதான Harold LeBel-க்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி 2 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பிலும், பாதிக்கப்பட்ட நபரை அவர் இனி தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.