Reading Time: < 1 minute
தேவையானவை :
கோழி- ஒரு கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-2
பச்சைமிளகாய்- 2
இஞ்சி – இரண்டு அங்குலத் துண்டு
பூண்டு- பத்து பற்கள்
மிளகு- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
தனியா-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள்- 1 /2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
பட்டை-4
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை :
- கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும்.
- வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
- மிளகுடன் இஞ்சி பூண்டை சேர்த்து அரைக்கவும்.
- கோழித் துண்டுகளில் மிளகுத்தூள்,மஞ்சத்தூள்,உப்புத்தூள், சிறிது இஞ்சி பூண்டு கலவை ,மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
- பின்பு அதில் ஒரு கப் நீரைச் சேர்த்து குக்கரில் அரை வேக்காடாக வேகவைக்கவும்.
- கடாயில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வெங்காயத்தை போடவும்.
- வெங்காயம் சிவந்ததும் பச்சைமிளகாய்,மீதியிருக்கும் இஞ்சி பூண்டு அரவை மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
- பின்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் வேகவைத்த கோழித் துண்டூகளை போட்டு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி,அடுப்பை நிதானமாக வைத்து வேகவிடவும்.
- மசாலாவிலுள்ள நீர் சுண்டியதும் மிளகுத்தூளைத் தூவி ஒரு கிளரு கிள்றிவிட்டு கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கிவிடவும்.