ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது.
தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறி ஒஸ்கார் அதை நிராகரித்துவிட்டது.
‘Funny Boy’ யை நிராகரித்தது ஒஸ்கார், ‘பிறமொழி’ வகைக்குள் அடங்காது. தமிழ், சிங்கள் மொழிப் பிரயோகம் 37% மட்டுமே
ஒஸ்கார் எனப்படும் Academy of Motion Picture of Arts and Sciences என்னும் அமைப்பின் விதிமுறைகளின்படி, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்டு, 50% த்துக்கு மேல் பிறமொழிப் பிரயோகத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு படம் ‘பிறமொழி’ வகைக்குள் அடங்கும். ‘Funny Boy’ திரைப்படம் 37% மட்டுமே பிற மொழியைக் கொண்டிருந்தது.
ஒரு மணித்தியாலம், 49 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் 12 நிமிடங்கள், 27 செக்கண்டுகளுக்கு மட்டுமே தமிழ் சிங்கள மொழிகளின் பிரயோகம் உண்டு. ஒப்பீட்டளவில், ஆங்கிலம் 20 நிமிடங்கள் 58 செக்கண்டுகள் ஆங்கில மொழிப் பிரயோகம் இருக்கிறது.
“ஒஸ்காரின் நிராகரிப்பு பற்றிக் கருத்துக்கூறிய, தீபா மேத்தாவின் கணவரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான டேவிட் ஹமில்ற்றன், “இப்படம் சர்வதேச மொழிப்படமென்ற வகைக்குள் அடங்குமென நாம் முற்றாக நம்பியிருந்தோம். ஆநாலும் ஒஸ்காரின் முடிவை நாம் ஏற்றுக்கொள்கிறோம்” என அசோசியேட்டட் பிறெஸிற்கு கொடுத்த மின்னஞ்சல் அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். (Source: TorontoStar)