ஒன்ராறியோவில் ஏழு பொது சுகாதார பிரிவுகளில் வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக, ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
தெற்கு ஒன்ராறியோவின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வழமை போன்று இணையவழி கல்வி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒன்ராறியோ கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள பொது சுகாதார பிரிவுகளின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு
• Grey Bruce Health Unit
• Haliburton, Kawartha, Pine Ridge District Health Unit
• Hastings and Prince Edward Counties Health Unit
• Kingston, Frontenac and Lennox & Addington Health Unit
• Leeds, Grenville and Lanark District Health Unit
• Peterborough Public Health
• Renfrew County and District Health Unit