Reading Time: < 1 minute

ஒண்டாரியோ மாகாணம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது Covid -19 மருத்துவ சோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

கனேடிய மத்திய அரசாங்கம் எல்லைப்பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துவதில் உள்ள காலதாமதமும் Covid -19 தடுப்பூசிகளின் பற்றாக்குறை மற்றும் London U.K மாற்று வைரஸின் தொற்றுப்பரவல் அதிகரிப்புமே மாகாண அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளது.

அண்மையில் Toronto சர்வதேச விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட Covid – 19 மருத்துவ பரிசோதனையில் 27 வீதமான பயணிகளில் Covid -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சட்ட அமுலாக்கம் Ontario சுகாதார பாதுகாப்பு சட்டம் 22 ம் பிரிவின் கீழ் நடைமுறைக்கு வரும் என்றும் இதன் மூலம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரியவருகிறது.