Reading Time: < 1 minute

தேவையானவை :

மட்டன் – கால் கிலோ
மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு எண்ணெய் -தேவையான அளவு
பட்டை, கிராம்பு, சோம்பு – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை :

  1. மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும் .
  2. வெந்ததும் நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்க வேண்டும் .
  4. இப்பொழுது சூடான மட்டன் சூப் ரெடி.தேவைப்பட்டால் பெப்பர் தூவி பரிமாறலாம் .