Reading Time: < 1 minute
தேவையானவை :
கொத்துக்கறி – அரைக் கிலோ
கடலைப்பருப்பு – அரை கப்
தக்காளி – இரண்டு
வெங்காயம் – 1
இஞ்சி – சிறிது
பூண்டு – 4 பற்கள்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
தனியாத்துள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்துள் – சிறிது
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
பட்டை- 2 துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி
செய்முறை :
- தக்காளி வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பை போட்டு பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
- கறி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டூ மஞ்சத்தூளைப் போட்டு வதக்கவும்.பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கவும்.
- பிறகு எல்லா பொடிகளையும் போட்டு உப்பையும் போட்டு நன்கு வதக்கி ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
- கறி நன்கு வெந்ததும் அதில் புளித்தண்ணீர் மற்றும் வேகவைத்த கடலைப்பருப்பைப் போட்டு அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
- சாதம் மற்றும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான கொத்துக்கறி கூட்டு தயார்.