Reading Time: < 1 minute

தேவையானவை :

கொத்துகறி – அரைகிலோ
இஞ்சி – சிறிது
பூண்டு – பத்து பற்கள்
பச்சைமிளகாய் – பத்து
பொட்டுகடலை மாவு – கால் கப்
பட்டை – 2
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
முட்டை – ஒன்று
உப்பு – தேவைகேற்ப

கிரேவி செய்ய தேவையானவை :

வெங்காயம்-நான்கு
தக்காளி – ஆறு
மிளகாய்த்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கரம்மசாலா – ஒரு டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு – கால் கப்
கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இல்லை – இரண்டு

செய்முறை :

  1. கொத்துக் கறியை கழுவி நீரைப் நன்கு பிழிந்து வைக்கவும்,மிக்ஸியில் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கிராம்பு பட்டை ஏலக்காய் சோம்பு உப்பு கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு அரைத்து அதனுடன் கொத்துக்கறியை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

2. பின்பு அதில் பொட்டுகடலை மாவைப் போட்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

கிரேவி செய்வதற்கு:

  1. வெங்காயம் தக்காளியை தனித்தனியே அரைக்கவும் , பாதாம்பருப்பையும் கசகசாவையும் ஊறவைத்து பாதாம்பருப்பின் தோலை உரித்து இரண்டையும் சேர்த்து மைய்ய அரைக்கவும்.

2. வாணலியில் எண்ணெயை காலைவைத்து அதில் கிராம்பு ஏலக்காய் பட்டை பிரிஞ்சி இலையைப் போட்டு அரைத்துவைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுதை ஊற்றி கிளறவும்.

3. பின்பு அதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சத்தூளைப் போட்டு வதக்கவும்.மசாலா எண்ணெய் கக்கியதும் நான்கு கோப்பை நீரைச் சேர்த்து உப்பைப் போட்டு கொதிக்கவிடவும்.

4. நன்கு கொதித்ததும் அரைத்துவத்துள்ள பருப்புவிழுதை போட்டு கரம் மசாலாவையும் போட்டு கலக்கி ஒரு கொத்தி வந்ததும் பொறித்து வைத்துள்ள கோப்தா உருண்டைகளைப் போட்டு இறக்கி வைக்கவும்.

5. கொத்தமல்லி கறிவேப்பிலையைத் தூவி சூடாக பரிமாறவும்.