Reading Time: < 1 minute
தேவையானவை :
மட்டன் – அரைகிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – ஒன்று
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – ஆறு பற்கள்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பட்டை லவங்கம் ஏலக்காய் – இரண்டு
மிளகாய்த்தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் – மூன்று டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா – சிறிது
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – இரண்டு கரண்டி
செய்முறை :
- மட்டனை சிறிய துண்டுகளாக,வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்,
- சிறிது எண்ணெயில் நறுக்கிய ஒரு வெங்காயம் மிளகு இஞ்சி பூண்டு மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டூ வதக்கி அரைத்து வைக்கவும்,
- குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சோம்பை போடவும்பின்பு வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும்,
- பின்பு கறியைப் போட்டு வதக்கி அரைத்த விழுதைப் போட்டு வதக்கவும்,
- பின்பு உப்பு மஞ்சத்தூளைப் போட்டு ஒரு கோப்பை நீரைச் சேர்த்து வேகவிடவும்,
பிறகு வெந்த கறியை கடாயில் கொட்டி அதில் மிளகாய்த்தூள்,தனியாத்தூளை போட்டு கிளறவும், - மசாலா நன்கு வதக்கி கொத்தமல்லி புதினாவைத் தூவி இறக்கவும்.