பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) இன்று மாலை உடல்நலக்குறைவால் இன்று (December 26, 2021) காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15000 க்கும் மேற்பட்ட பாடல்களைபாடியுள்ள இவர், திருடா திருடி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியன், கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழி திரைப் படங்களிலும் பாடியுள்ள மாணிக்க விநாயகம், பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
உலகத்தமிழரிடையே மிகவும் பிரபலமான “விடை கொடு எங்கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே” என்ற பாடலை பாடியவர் மாணிக்கவிநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணிக்க விநாயகம் பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா என்பவரின் இளைய மகன்.
இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.