பிக் பாஸ் போட்டியாளர்களில் மக்களின் மனம் கவர்ந்தவராக வலம் வரும் லாஸ்லியா திருமணமாகி, விவாகரத்தானவர் என அவரது நண்பர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவும் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே அவருக்கு ரசிகர்கள் உருவாகி விட்டனர். வீட்டில் எந்த சர்ச்சையிலும், சண்டையிலும் சிக்காமல் சாமர்த்தியமாக விளையாடி வரும் அவருக்கு ஆர்மி கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் சீசனில் ஓவியாவுக்கும், இரண்டாவது சீசனில் ரித்விகாவுக்கும் கிடைத்த ஆதரவு, இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு கிடைத்துள்ளது. இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியிருக்கிறார்.

இந்நிலையில், லாஸ்லியாவின் நண்பர் ஒருவர் டிவிட்டரில், ‘லாஸ்லியாவிற்கு திருமணமாகி விட்டது’ எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து:
அதாவது தன்னுடன் படித்த ஒருவரை லாஸ்லியா காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால், கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வெளியிட்டுள்ளவர் லாஸ்லியாவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வதந்தியா?
அதோடு, ‘லாஸ்லியா மிகவும் ஆபத்தானவர்,கூடிய விரைவில் லாஸ்லியாவின் உண்மை முகம் தெரிய வரும்’ எனவும் அவர் கூறியிருக்கிறார். இது லாஸ்லியா ஆர்மியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்படியென்றால் பிக் பாஸ் வீட்டில் அவர் நடிக்கிறாரா இல்லை, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி தவறான தகவல்களைப் பரப்புகிறார்களா என்பது தெரியவில்லை.

மீரா:
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் ரேஷ்மா திருமணமானவர், மூன்று குழந்தைகளின் தாய் என்பது பலருக்கு தெரிந்தது. அதேபோல், மீராவும் திருமணமானவர் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிய வந்தது. தனக்கு விவாகரத்து ஆகி விட்டது என மீராவும், ரேஷ்மாவுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாகக் கூறினர்.
குழப்பம்:
அவர்களைப் போலவே வரும் வாரங்களில் லாஸ்லியாவும் ஏதாவது உண்மையைக் கூறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருமணமானது உண்மை என்றால், அதனை ஏன் அவர் மறைத்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தத் தகவலால் லாஸ்லியா ஆர்மியினர் குழப்பத்தில் உள்ளனர்.
மீண்டும் பரபரப்பு:
கடந்த சில நாட்களாக வனிதா கைது, மீரா கைது என பரபரப்பு கிளம்பிய நிலையில், தற்போது லாஸ்லியாவின் திருமண விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இது தொடர்பாக வெளிப்படையாக பேசினால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும்.