Reading Time: < 1 minute

மார்க்கம் தோர்ன்ஹில் (Markham – Thornhill) தொகுதியில் கொன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், கொன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார்.

இவர் Markham – Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை வெளியிடும் அறிமுக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (Feb 15, 2024) நடைபெற்றது.

மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதியை 2019ஆம் ஆண்டு முதல் லிபெரல் கட்சி அமைச்சர் Mary Ng பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். கடந்த பொதுத் தேர்தலில் கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Melissa Felian இந்த தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழ்-கனடியர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.