கனடா திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பெண் பக்தரின் தங்க சங்கிலி மற்றும் தாலி என்பன திருட்டு.
கடந்த புதன்கிழமை (ஜூன் 12, 2019) ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டர்னர்.
பக்தர்களின் போர்வையில் திருடர்களும் இதில் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியில் வந்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டஒரு மூதாட்டியின் தங்க சங்கிலி மற்றும் அதில் கோர்க்கப்பட்டிருந்த தாலி என்பன கூட்டநெரிச்சலில் திருடர்கள் அறுத்துசென்றுள்ளனர்.
இதுதொடர்பாக ஆலயநிர்வாகத்திடம் அந்த வயதான பெண் முறையிட்டுள்ள பொழுதிலும் இதுவரை திருடர் அகப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்திய கோவில்களில் நடைபெறுவது போன்று கனடாவிலுமா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லையாயினும், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்நாடும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்பதையே இந்நிகழ்வு எடுத்தியம்புகின்றது.
டொரொண்டோதமிழ் (TorontoTamil.com) ஆலய நிர்வாகத்தை தொடர்புகொண்டு இதுதொடர்பாக கேட்டபொழுது, களவு கொடுத்தவர் முறைப்பாடு செய்ததாகவும் ஆனால் இதுவரை திருடர்கள் யார் என்பது தெரியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தாம் முழுக்கவனம் எடுத்துள்ளதாக அறக்காவலர் சபை தலைவர் திரு மகாத்மன் கதிர்காமநாதன் டொரொண்டோதமிழுக்கு (TorontoTamil.com) தெரிவித்தார்.
இந்நிகழ்வின் மூலம் சகல ஆலய நிர்வாகமும் எதிர்வரும் காலங்களில் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகின்றது.
ஆலய நிர்வாகங்கள் கவனத்தில் எடுக்குமா?.
www.TorontoTamil.com