Reading Time: < 1 minute

கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராகின்றார் ஜெரமியா விஜயரத்னம்!

எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் Maxime Bernier தலைமையிலான கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada) சார்பில் தமிழரான ஜெரமியா விஜயரத்னம் (Jeremiah VJ Vijeyaratnam) போட்டியிடுகின்றார்.

கனடாவின் மக்கள் கட்சியின் Scarborough Centre தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார். இது குறித்த
உத்தியோகபூர்வ அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இதன் மூலம் கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராகின்றார் ஜெரமியா விஜயரத்னம்.

Conservative கட்சியில் இருந்து விலகிய Maxime Bernier 2018ஆம் ஆண்டு September மாதம் 14ஆம் திகதி கனடாவின் மக்கள் கட்சியை உருவாக்கினார்.

ஜெரமியா விஜயரத்னம் கடந்த மாநகர சபைத் தேர்தலில் Markham நகரசபையின் ஐந்தாம் தொகுதிக்கான நகரசபை பதவிக்கு போட்டியிட்டிருந்தார். இந்தத் தேர்தலில் அவர் மொத்தம் 525 வாக்குகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Courtesy: Thesiyam