Reading Time: < 1 minute
கனடிய அரசால் கரிபியன் நாடுகளுக்கான விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை, தமது பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக ஜமேக்கா கூறியுள்ளது.
கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை தடுப்பதற்காக, மெக்சிகோ மற்றும் கரிபியன் நாடுகளுக்கான விமான பயணங்கள் அனைத்தையும், கனடா தடை செய்துள்ளது.
இதனால், 449 மில்லியன் டொலர்கள் இழப்பு தமக்கு ஏற்படுமென, கரிபியன் நாடான ஜமேக்காவின் சுற்றுலாத்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
கனடாவின் வழமையான குளிர்காலமொன்றில், 200,000 வரையிலான கனடிய மக்கள் ஜமேக்காவுக்கு வருவதாக அது தெரிவித்துள்ளது.