ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.
விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, Dundas Square சதுக்கத்தில் துண்டுப்பிரசுர விழப்பு பரப்புரை செய்யப்படவுள்ளன.
- பின்னர் மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை, Milliken Mills Community Centre, North Hall, 7600 Kennedy Rd, (between Denison and 14th Ave) Markham, ON L3R 9S5 இடத்தில் கருத்தாடல் நிகழ்வு ஒருங்கு செய்யப்பட்டுள்ளது.
- மறுநாள் 31-08-2019 சனிகிழமையன்று Markham – Steels சந்தியில் விழிப்பு பரப்புரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிழர் தாயகத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. கனடா உட்பட அமெரிக்கா பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியை வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கனடாவில் முன்னெடுக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் விழிப்பு நிகழ்வுகளில் அனைவரையும் பங்கெடுத்து நீதியினை வென்றடைய அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் : http://youarenotforgotten.org/
தொடர்புகளுக்கு: +1 (647) 783-3466
+1 (416) 766-9544
(647) 262-5587
416-830-4305