சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில் இதனை தெரிவித்தார்.
இதன்படி அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளது மீளாய்வின் அடிப்படையில் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுகின்றன.
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கியமான நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவேண்டிய நிபந்தனையும் காணப்படுகின்றது.
எனவே முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளங்காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.