Reading Time: < 1 minute

சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும் அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டை காப்பாற்றி எனது திறமையை நிரூபித்தேன்.

மேலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து தான் நான் கவனம் செலுத்தி வருகின்றேன்.

சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும். ஆனால் நான் ஊழலைத் தடுப்பதற்காக பல சட்டங்களை இயற்றியுள்ளேன்.

ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் நாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.