Reading Time: < 1 minute

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வாரம் தொடக்கம் ரொறண்டோ பெரும்பாக மற்றும் கனேடிய படைகளின் போர்டன் (Borden) தளம் இடையேயான வீதிகளில் ஏராளமான கனடிய இராணுவத்தினரின் நடமாட்டங்களை காணலாம்..

டொரோண்டோ – போர்டன் (Borden) இராணுவ தளம் இடையேயான சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வாகனங்கள் மற்றும் பணியாளர்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கும் என இன்று
ஞாயிற்றுக்கிழமை தேசிய பாதுகாப்புத் துறை (டி.என்.டி) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.

கனேடிய படைகள் துருப்புக்களை நகர்த்தத் தொடங்கும் இந்த நேரத்தில் டொரோண்டோ மாநகர முதல்வர் ஜான் டோரி (John Tory) டொரொண்டோவுக்கு இந்நிலையில் இராணுவம் தேவையில்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்