கனடிய உணவு ஆய்வு நிறுவனம் ஹார்வெஸ்ட் மீட்ஸ் (Harvest Polish Sausage.) தங்கள் போலந்து தொத்திறைச்சிகள் குறித்து பொதுமக்களை எச்சரித்தது. சரியாகச் சமைக்கப்படாத இது உடல்ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஹார்வெஸ்ட் மீட்ஸ் தொத்திறைச்சி திரும்ப அழைக்கப்படுகிறது. ஏனெனில், அதில் பாக்டீரியா நோய்க்கிருமிகள் இருக்கலாம். சமைத்த உணவில் பாக்டீரியா நோய்க்கிருமிகள் இருக்கலாம். அவை நம்மை நோய்வாய்ப்படுத்தும்.
இந்தத் தயாரிப்பு பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்காட்செவன், மனிடோபா, வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் ஒன்றாரியோவில் விற்கப்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கூடுதலாக, அவை 675 கிராம் பொதிகளில் விற்கப்பட்டன. மேலும், அவை பயன்படுத்த ஏற்ற திகதி மார்ச் 15, 2021 க்கு முன்னதாகவே இருக்கும்.
பொதுமக்கள் இந்த தயாரிப்பை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே வீட்டில் வாங்கி வைத்திருந்தாலும் அதை சரிபார்க்க வேண்டும் என்று உணவு நிறுவனம் கூறுகிறது.
மக்கள் திரும்ப அழைக்கப்பெற்ற தயாரிப்புகளை வெளியே எறிய வேண்டும் அல்லது அதை முதலில் வாங்கிய இடத்திற்கு திருப்பித் தருமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இறைச்சி உற்பத்தியின் நுகர்வு தொடர்பான நோய்கள் குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை.