Reading Time: < 1 minute

தேவையானவை:

மீன் – 3
மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு – 4 பல்
மிளகு – 1 /2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – வறுப்பதற்கு

செய்முறை:

1.மீனை சுத்தம் செய்து வட்டமாய் நறுக்கி கொள்ளவும்.
2.மிளகு,பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும்.
3.மீனில் மிளகு ,பூண்டு ,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து ஊறவைக்கவும் .
4.எண்ணையை காயவைத்து மசாலாவில் ஊறிய மீனை போட்டு எடுக்கவும்.