ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், மோசடி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழைக் காண்பித்து பயணம் செய்ய முயன்ற ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 8 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கனடா எல்லை சேவைகள் முகமை அதிகாரியும் சுகாதார அதிகாரியும், சோதனை மேற்கொண்டபோது, கொரோனா பரிசோதனை ஆவணம் மோசடியானது என்று கண்டுபிடித்தனர்.
நேர்மறையான சோதனை முடிவு, எதிர்மறையான முடிவு என்று அதில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது என்று பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ட்ராட்போர்டைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த நபர், காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாகவும் தெரிந்தே போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டுள்ள அவர் ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த நபர் தனது 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு ஒரு ஹோட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.