ஐ. நா மனித உரிமைச் சபையும், கனேடியத் தமிழர்களின் வகிபாகமும்
ஐ. நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கின்றது. சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட மேலதிக காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பில்புதியதொரு தீர்மானம் கூட்டுநாடுகளினால் கொண்டுவரப்படுவதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. தீர்மானத்தினை முன்னெடுக்கும் கூட்டுநாடுகளில் ஒன்றாக கனடாவும் இருக்கின்ற நிலையில், ஈழத்தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பரிகார நீதியினை பெற்றுக் கொள்வதற்கானஅழுத்தத்தினை கனேடிய அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டிய கடப்பாடு கனேடிய தமிழ்சமூகத்துக்குகாணப்படுகின்றது. இந்நிலையில் கனேடிய வெளிநாட்டு அமைச்சுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு கனேடிய தமிழ்சமூகமாகநாங்கள் ஆற்ற வேண்டிய செயற்திட்ட முன்னெடுப்பில் தங்களையும் பங்காளராக இணைய வேண்டுகின்றோம். இதற்கான இணைவழி கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 - 01 - 2021) மாலை 4 மணிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ZOOM link : https://us02web.zoom.us/j/84588858503?pwd=MjVQUkJYTFhPRVQ5MzNFSzVsWkpoZz09 ID : 845 8885 8503 Passcode : 101168 தங்களுடைய வரவினை உரிமையோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்பார்க்கின்றது நன்றி.