Loading Events

« All Events

  • This event has passed.

நினைவு நல்லது நூல் வெளியீடு!

November 4, 2023 @ 4:30 PM 7:30 PM

நினைவு நல்லது’ என்ற எனது ஊடக அனுபவத்தை விபரிக்கும் நூல், அது கிடைக்கப்பெற்றவர்களிடையே மிகுந்த பாராட்டையும் வாழ்த்தையும் பெறுவது அதை உருவாக்குவதற்குத் தீவிரமாக உழைத்த எனக்கும் எனது துணைவியாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

962 பக்கங்களைக்கொண்ட மிகப் பெரிய நூல்.

இலங்கைத் தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் பற்றிய இத்தகைய பாரிய நூல் இதுவரை வெளியாகவில்லையென்ற பாராட்டு மிகவும் பெருமை தருவதாக இருக்கிறது.

இதை முழுவதுமாகப் படிக்கும் இளம் ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை பற்றிய தெளிந்த அறிவு கிடைக்குமென்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஊடகத்துறை சாராதவர்களுக்கும் ஊடகத்துறைபற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை இந்த நூல் வழங்குகிறது.

‘நினைவு நல்லது’ நூல் நவம்பர் மாதம் 4ஆம் திகதி சனிக்கிழமை ரொரன்ரோவாழ் தமிழ் ஊடகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

அந்த நிகழ்ச்சிபற்றிய ஆரம்ப அறிவிப்பாகவும் அழைப்பாகவும் கீழே தரப்பட்டிருக்கும் அழைப்பிதழை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏற்கனவே ரொரன்ரோவாழ் ஊடகர்கள் பலர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு இணங்கியுள்ளார்கள்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நூல்களே கைவசம் இருப்பதால் நான் இதுவரை தொடர்புகொள்ளாத ஊடகர்களோ ஆர்வலர்களோ இருந்தால் தயவுசெய்து 647-779-0840 என்ற எனது தொலைபேசி இலக்கத்தில் என்னுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். நன்றி.

அன்புடன்,
P. விக்னேஸ்வரன்

Free

P. விக்னேஸ்வரன்

647-779-0840

Commander Park

140 Commander Blvd
Scarborough, Ontario M1S 3H7 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!