Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தியாகதீபக் கலைமாலை 2019

September 29, 2019 @ 6:00 PM - 10:00 PM

Free

செப்டம்பர் 29 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு

ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவாகவும், கேணல் சங்கரின் 18ஆம் ஆண்டு நினைவாகவும் , கேணல் இராயுவின் 17ஆம் ஆண்டு நினைவாகவும் மற்றும் அனைத்து மாவீரர்களின் நினைவாகவும்

தியாகதீபக் கலைமாலை 2019

வணக்க நிகழ்வுடன், எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அனுமதி இலவசம்!

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு

தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Finch Ave E)
Scarborough, ON M1X 1S9

– கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் –

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியினாலும் துரோகத்தனத்தாலும் இந்திய ஆக்கிரமிப்பு படை அமைதிப்படை என்ற பெயரில் எம் மண்ணில் ஆடிய கொட்டங்கள் ஒரு புறம், இந்திய அரச சூழ்ச்சியில் கொல்லப்பட்டவர்கள் ஒரு புறம் என இந்திய அரசின் துரோகங்களுக்கு விதையான அனைத்து மாவீரர்களுக்குமான வீர வணக்க நினைவு நிகழ்வு.

இந்திய வல்லாதிக்க சதிகளுக்கு தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்த, ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன், லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உள்ளிட்ட தீருவில் தீயான பன்னிரு வேங்கைகள், முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்குமான கனடியத் தமிழரின் வீர வணக்க நிகழ்வில் அனைத்து உறவுகளும் விடுதலைக்கு விதையாக வீழ்ந்து எழுச்சியின் வடிவாக தமிழ் மக்கள் உள்ளங்களில் உயிர்த்தெழும் எம் மாவீரர்களுக்கு மலர் தூவி வணங்க அழைக்கப்படுகின்றீர்கள்.

Details

Date:
September 29, 2019
Time:
6:00 PM - 10:00 PM
Cost:
Free

Organizer

கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

Venue

Thamil Isai Kalaa Manram
1120 Tapscott Rd #3
Scarborough, ON M1X 1S9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...