Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

தூவானம் திரைப்பட சிறப்புக் காட்சி

June 10, 2023 @ 2:00 PM 4:00 PM

சிரேஷ்ட வைத்திய நிபுணரின் முழு நீளபடமான “தூவானம்”.

இத் திரைப்படம், எமது வாழ்வியலையும் கலை கலாசாரத்தையும் தனித்துவத்தையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்து நிற்பதால் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது.முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட இருக்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் வைத்தியர்களின் அமைப்பான JMFOA (JAFFNA MEDICAL FACULTY OVERSEAS AUMNI) அனுசரணையுடன் திரையிடப்படவுள்ளது.இத் திரைப்படமானது புலம்பெயர் சமூகம் எவ்வாறு எமது ஈழத்து மக்களின் நிரந்தரமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவலாம் என்ற கருத்தைத் தாங்கி வருகின்றது.

இதுபோன்ற ஈழத்துப் படைப்புகளை ஊக்குவிக்கவும் அவர்களின் தேவையை அறிந்துகொள்ளவும், புலம்பெயர் சமூகத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

JMFOA – Canada

416-291-4860

Woodside Square Cinemas

1571 Sandhurst Cir
Scarborough, ON M1V 1V2 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...