Loading Events

« All Events

  • This event has passed.

Grand Gala / Tamilology Festival 2020

January 25, 2020 @ 8:30 AM - 8:30 PM

Free

On behalf of the National Council of Canadian Tamils, we would like to extend an invitation for you to attend the Tamil Heritage Month final event on Saturday January 25th, 2020 at Markham Convention Centre.

Event schedules:
OPENING CEREMONY: 08.30 AM – 09:30 AM
PANEL DISCUSSION: 09.30 AM – 12.30 PM
STAGE PROGRAMS: 02:00 PM – 05:00 PM
DINNER RECEPTION: 05:30 PM – 06:30 PM
GALA DINNER: 06:30 PM – 08.30 PM

There will be three different simultaneous panel discussions to take place from 9.30 AM to 12.30 PM. One for students from Grade 9 to University level. Other two panel discussions are to Parents and Teachers.

This one day event focuses on the future direction of Tamil language and culture in the diaspora. The dinner at 6 PM focuses on recognizing individuals and organizations for their achievements.
Over 2000 guests attend the final day events.

தமிழ் மரபுத் திங்கள் – வரலாறு (கனடா):

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். பல நாடுகளில் இருந்து வருகை தந்து, எமக்கு முன்னர் இங்கு குடியேறிய பல இனக்குழுக்கள் கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, தமது அடையாளத்தையும் இழக்காமல், இருப்பைத் தக்க வைத்துள்ளன. அதே வேளையில் தமது மரபுகளையும் பேணி முன்னெடுக்கின்றன. அவ்வகையில் நாமும் நமது அடையாள இருப்புக்கான, எமது மரபுகளையும் பேண வேண்டும்.

2003ம் ஆண்டில் முதன் முதலாகக் கனடாத் தமிழ்க் கல்லூரியால் ரொரன்ரோ நகரை மையப்படுத்தித் தமிழ் மொழி வாரம் ஒழுங்கு செய்யப்பட்டது. ஓர் இனத்தின் உயிரின் இருப்பாக, ஆணிவேராக அமைந்திருப்பது அந்த இனத்தின் மொழியாகும். இந்த அடிப்படையில் தமிழ்மொழி வாரத்தின் முழக்கமாக ‘தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

தமிழ்க் கல்வியை மழலையர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கும் வசதிகள் இருந்தும் தமிழ் மாணவரும் பெற்றோரும் தமிழ்க்கல்வி கற்பதில் பெருமளவில் அக்கறை எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருந்தது. எனவேஇ தமிழ்மொழி கற்பதை முன் நிறுத்துவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இந்தத் தமிழ் மொழி வாரத்தின் முதன்மை நோக்கமாகவிருந்தது. கனடியத் தமிழர்களிடையே இருக்கின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து ‘தமிழ் மேம்பாட்டுக் கழகம்’ என்ற பெயரில் அவையும் ஒன்று உருவாக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழி வாரத்தின் முக்கிய நோக்கமாகச் கனடாத் தமிழ்க் கல்லூரியும்இ ஏனைய கனடியத் தமிழ் நிறுவனங்களும் இணைந்துஇ கனடா வாழ் ஈழத் தமிழர்களின் கவனம் தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்க் கல்வி, தமிழியல் ஆய்வு போன்ற துறைகளில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் மொழி வார நிகழச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

தமிழ் மொழியைப் பல தலை முறைகளுக்கு நிலைத்து நிற்கச் செய்வதற்கும், மொழியின் மேம்பாட்டைத் திறன் மிக்க முறையில் கொண்டு செல்வதற்கும் கனடாவில் தமிழ் மொழிக் கல்வியைப் பரவலாக்கவும் வேண்டித் தமிழ்மொழி வாரத்தை ஆண்டு தோறும் கொண்டாடுவதெனவும் மேற் கூறிய நோக்கங்களை நிறைவேற்றவும் கீழ்வரும் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.
1. எங்கள் பிள்ளைகளைத் தமிழ் வகுப்பில் சேர்ப்போம்.
2. பெற்றோரும் பிள்ளைகளும் தமிழரிடையே தமிழிற் பேசுவதை உறுதி செய்வோம்.
3. நாம் அனைவரும் முடிந்த வரை பிறமொழி விலக்கித் தமிழைப் பயன்படுத்துவோம்.
4. எமது வாழ்வியலில் தமிழ் மொழிப் பண்பாட்டுக்கு முதன்மை அளிப்போம்.
5. தமிழ் நூல்களை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்.
6. தமிழ் கற்பது பற்றி நிலவும் ஐயங்களை நீக்குவோம்.
7. தமிழை முறையாகக் கற்பதில் நிலவும் குறைபாடுகளை அகற்றுவோம்.
8. பல்கலைக்கழக நுழைவுக்கு ஒரு பாடமாக தமிழ் மொழியைக் கற்க முடியும் என்னும் செய்தியைப் பரப்புவோம்.
9. தமிழியற் துறையைக் கனேடிய பல்கலைக் கழகத்தில் நிறுவுவதற்கு உழைத்து வரும் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவுவோம்.
10. நுண்கலைகள் பயிற்றுவிப்போர், தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.
11. தமிழ்மொழி வார நிகழ்வுகளில் ஊக்கமுடன் பங்காற்றுவோம்.
12. தமிழ் இதழியலாளர், தமிழ்மொழி வாரச் சிறப்பிதழாகத் தமிழ் மொழி பற்றி அறிவூட்டும் ஆக்கங்களை வெளியிடுவதையும், தமிழ்த் தொலைக் காட்சிகள் அவற்றை ஒளிபரப்புவதையும், தமிழ் வானொலிகள் அவற்றை ஒலிபரப்புவதையும் உறுதி செய்வோம்.
13. கனடாவில் பெருந் தொகையான அதாவது 30,000 மாணவர்கள் தமிழ்மொழி கற்பதை உறுதிப்படுத்துவோம்.

இவ்வாறு தமிழ்மொழி வாரத்துக்கு உறுதி எடுக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளும், கலந்துரையாடல்களும், பட்டிமன்றங்களும், அறிஞர்களின் கருத்தரங்குகளும், பல பெரியார்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், இசைவல்லுனர்கள் போன்றோரால் பல தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்மொழி வார முதல் நாள் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகத் தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமதி. சிந்தியா பாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு தைத் திங்களிலும் மாணவர், பெற்றோர் மத்தியில் தமிழர் மரபுகளைப் போற்றிப் பேணும் நடவடிக்கைகளைத் ‘தமிழ் மொழி வாரம்’ செய்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் இறுதியில் தமிழ்க் கல்வியை கற்பிக்கும் அமைப்பான அறிவகமும் இணைந்து ‘தமிழ் மரபுத் திங்கள்’ அமைப்பு உருவாக்கம் பெற்றது. இவ்வமைப்பு பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது வருவாய் நோக்கற்றதாகும். இதில் இப்போது பல அமைப்புகளும் இணைந்துள்ளன. தமிழ்மொழி வாரமானது, தமிழ் மரபுத் திங்கள் அமைப்பாக மாற்றம் பெற்றபின்னர், 2010இல் முதலாவது தமிழ் மரபுத் திங்கள் விழா பல இடங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழர் மத்தியில் மட்டுமல்லாமல், எமது மரபுகளை மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, முறையான பிரகடனம் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டது. திட்டங்களின் செயற்பாடுகள் வாயிலாக, 2012இல் ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மார்க்கம், ஏயாக்ஸ், பிக்கெரிங் நகரங்களும் 2013இல் பிராம்ரன், தொரன்ரோ, நகரங்களும், 2014இல் ஒட்டாவா நகரமும் தைத் திங்களைத் தமிழரின் மரபுரிமைத் திங்களாக அறிவித்தன. 2014இல் ஒன்ராரியோ மாநில அரசு தமிழ் மரபுத் திங்களைச் சட்டவலுவுள்ளதாக உருவாக்கியது. 2016இல் கனடிய மத்திய அரசு தமிழ் மரபுத் திங்களை ஏற்றுச் சட்டமியற்றியது. இச்சட்டத்தின் ஊடாக கனடா நாடு முழுமையும் தைத்திங்களை தமிழ் மரபுரிமைத் திங்களாக அனைவரும் கொண்டாடக் கூடியதாக உள்ளது.

2019ஆம் ஆண்டில் தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, முதலாவது உலகத் தமிழியல் மாநாடு – தமிழியல்: இன்றும் இனியும் என்னும் தலைப்பில் ரொரன்ரோவில் நடைந்தேறியது. இம்மாநாட்டுக்கு, தாயகத்தில் இருந்தும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர் வருகை தந்திருந்தனர். இம்மாபெரும் மாநாட்டைக் கனடாத் தமிழ்க் கல்லூரியானது அறிவகத்தோடும் கனடியத் தமிழர் தேசிய அவையினரோடும் இணைந்து நடத்தியிருந்தது.

– நன்றி –

Details

Date:
January 25, 2020
Time:
8:30 AM - 8:30 PM
Cost:
Free

Organizer

National Council of Canadian Tamils – NCCT
Phone
416-830-7730

Venue

Markham Convention Centre
2901 Markham Rd
Toronto, ON M1X 0B6 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!