Loading Events

« All Events

  • This event has passed.

பொது வாக்கெடுப்பு விபரக் கையேடு வெளியீடு

March 13, 2022 @ 6:00 PM - 8:00 PM

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்பு

விபரக் கையேடு வெளியீடு

ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொது வாக்கெடுப்பேவழிவகுக்கும் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

இவ் வாக்கெடுப்பு எவ்வாறு?, யாரால்?, நடத்தப்படல் வேண்டும், யார் இதில் வாக்களிக்கலாம்? இது உலகத்தில்ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையா? இதை சரிவர செய்ய நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் யாவை? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் அடங்கிய ஒரு விபரக் கையேடு  நாடுகடந்த தமிழீழ  அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இக் கையேடு  ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான விடுதலைப்போராட்டங்களின் வரலாற்றுக் குறிப்புகள், படங்கள் பலவற்றையும் உள்ளடங்கிய ஒரு ஆவணமாகஅமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வின் விபரங்கள்:

காலம்:  மார்ச் 13. 2022 (ஞாயிறு)

நேரம்:   பி. ப 6.00 மணி (கனடா)

இடம்:   நாடுகடந்த தமிழீழ அரசாங்கப்         பணிமனை- கனடா

Unit # A8; 2370 Midland Ave.     Scarborough,  ON

 

இந் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றஇருக்கிறார்கள்.

இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பணிமனை- கனடா

Details

Date:
March 13, 2022
Time:
6:00 PM - 8:00 PM

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!