Loading Events

« All Events

  • This event has passed.

வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டுவிழாவும் நூல்கள் வெளியீடு!

July 27, 2019 @ 5:00 PM - 11:00 PM

Free

அன்பிற்குரிய கனடிய தமிழ் அன்பர்கள், வேலணையூரவர்கள், புங்குடுதீவு ஊரவர்கள், வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா உறுப்பினர்கள், வேலணை மக்கள் ஒன்றியம்- கனடா உறுப்பினர்கள், வேலணை சைவப் பிரகாச வித்தியாசாலை, வேலணை சரசுவதி வித்தியாசாலை பழைய மாணவர்கள் , புங்குடுதீவு நலன்புரிச் சங்கம்- கனடா உறுப்பினர்கள், யாழ் இந்து பழைய மாணவர் சங்கம்-கனடா உறுப்பினர்கள், கனடிய தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்- மாணவர்கள்- பெற்றோர்கள், மற்றும் கனடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் உறுப்பினர்கள்- கனடிய தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள்- தமிழ் உணர்வாளர்கள்
ஆகிய அனைத்துத் தமிழ் உறவுகளே

எனதருமைத் தந்தையும், ஈழத் தமிழ்ப் பேரறிஞருமான தமிழ்ப்பேரன்பர் வித்துவான் க வேந்தனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும், அதையொட்டிய ஆறு நூல்கள், மூன்று குறுந்தகடுகள் வெளியீட்டு விழாவையும், வரும் 27.07.2019 சனிக்கிழமை, கனடா – ரொரன்றோவிலுள்ள அய்யப்பன் கோயில் மண்டபத்தில்( Iyappan Temple Hall, 635 Middlefield Road, Scarbirough, Ontario, M1V 5B8) , கனடாவிலுள்ள எனது தாய் மாமன்மாரின் பிள்ளைகள், வேலணை ஊரவர்கள் , புங்குடுதீவு ஊரவர்கள், எனது யாழ் இந்து நண்பர்கள் அவர்களின் ஆதரவுடன் கொண்டாடவுள்ளேன்.

இவ் விழாவிற்கு நீங்கள் உங்கள் உறவுகளுடன் குடும்பமாக வந்து, கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென , வேந்தனாரின் தமிழ் உணர்வின் பேரால், அன்போடும் , உரிமையோடும் அழைப்பு விடுகின்றேன்.

இத்துடன் இந்த விழாவிற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

இதனை நீங்கள் உங்கள் நண்பர்களுடன்- தமிழ் அறிஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி , பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்.

இலண்டனில் இந் நூற்றாண்டு விழாவை கடந்த சித்திரை மாத இறுதியில் கொண்டாடிய போது, வெளியிடப்படுகின்ற ஆறு நூல்கள்- மூன்று குறுந்தகடுகள் பற்றிய விளக்கத்தை, 19 நிமிடக் காணொளியாக, இலண்டன் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டேன். அதனை இன்று உங்களுடனும், வெளியிடும் வெளியீடுகளின் விளக்கம் கருதி இணைத்துள்ளேன். திகதி – இடம் போன்ற விபரங்களை நீங்கள் கவனிக்க வேண்டாம்.

இச் செய்தியின் தொடக்கத்திலும் , அழைப்பிதழிலும் , கனடா – ரொரன்றோ நிகழ்வின் விபரங்கள் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன.

இந்த விழாவிற்கான அழைப்பை, கவி வடிவில் , என் குரலோசையிலும், பதிய விட்டுள்ளேன்.

மீண்டும் உங்கள் அனைவரையும் 27.07.2019 நடக்கவிருக்கும் வித்துவான் வேந்தனார் நூற்றாண்டு விழா- நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு, மாலை 4.45 மணிக்குப் பிந்தாமல் வந்து, நிகழ்வுகள் சரியாக 5 மணிக்குத் தொடங்க ஒத்துழைக்கும்படி, அன்புடனும் , பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

” வில்லிற்கு வீரன் யாரெனில் விஜயனாகும்
விறல் தமிழ் சொல்லிற்கு வேந்தன் யார்? வேந்தனார்.

நன்றி.
அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்
இலண்டன்

Details

Date:
July 27, 2019
Time:
5:00 PM - 11:00 PM
Cost:
Free
Event Category:

Organizer

Arunmozhi Varman

Venue

Sri Ayyappa Samajam Of Ontario – Iyappan Temple
635 Middlefield Rd
Scarborough, ON M1V 5B8 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!