Reading Time: < 1 minute
தேவையானவை:
முட்டை – 1
மிளகு – 10
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – ஒரு துளி
செய்முறை:
- முதலில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் மிளகுப்பொடி,மஞ்சள்தூள்,உப்பு போட்டு முட்டை அடிக்கும் கரண்டியால் நன்றாக அடித்துக்கொள்.
- அடுப்பில் ஒரு தோசைக்கல்சூடேறியதும் கல்லில் சிறிது எண்ணெய் தடவிவிட்டு முட்டைகலவையை ஊற்றிக் கல்லை லேசாக சுழற்றினால் போதும்.முட்டை வெந்துவிடும்.பின்பு பரிமாறவும்.