Reading Time: < 1 minute
தேவையானவை:
முட்டைகள் – 2
கடலைப்பருபபு – ஒரு கை
துவரம்பருபபு – ஒரு கை
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வற்றல் மிளகாய் – 2
இஞ்சி விழுது – அரை ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
பெரிய வெங்காயம் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – கால் கப்
செய்முறை
- பருப்புக்களை வற்றல் மிளகாய்களு டன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்புடன் மையாக அரைக்கவும் . முட்டைகளை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து மாவுக்கலவை யுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெங்காயம்,கொத்தமல்லி சேர்க்கவும்.
3.நன்கு கலந்து சிறிய சிறிய அடைகளாய் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும் .