Reading Time: < 1 minute

தெற்கு ஒண்டாரியோவில் அமைந்துள்ள ரூச் தேசிய உள்ளக பூங்கா தொடர்பாக பொதுமக்கள் கற்றுக்கொள்ளும் நோக்கில், கல்வி மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புக்கள், நேற்றையதினம், கனடிய சுற்றுச்சூழல் அமைச்சர் கத்தரின் மக்கன்னாவினால் வெளியிடப்பட்டுள்ளன.

80 சதுர கிலோமீற்றர்கள் வரை பரப்பளவை கொண்ட ரூச் தேசிய உள்ளக பூங்கா, பிரதானமாக ஸ்கார்புரோவில் அமைந்துள்ளதுடன், மார்க்கம், பிக்கரிங், Uxbridge ஆகிய பிரதேசங்களிலும் பாகங்களை கொண்டுள்ளது.

ரூச் ஆற்றினை மையப்படுத்திய இப்பூங்காவிலுள்ளேயே டொரோண்டோ மிருகக்காட்சி சாலை உள்ளது.

அழிவை எதிர்நோக்கியுள்ள 23 இனங்கள் அடங்கலாக, 1700 தாவர மற்றும் விலங்கினங்களை இப்பூங்கா கொண்டுள்ளது.

ரூச் தேசிய உள்ளக பூங்காவுடனான மனிதர்களின் வரலாறு, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென நம்பப்படுகிறது.