கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் தொழில் முனைவோர் Startup Pitch இறுதி சுற்றை நேற்று கனடிய வர்த்தக சம்மேளன மண்டபத்தில் வெகு வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கின்றது.
இறுதி சுற்றுக்கு தெரிவான 10 தமிழ் தொழில் முனைவோர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என தங்களது புதிய தொழில் முயத்திகளையும், அவர்களின் புதுமையான யோசனையையும் கூடியிருந்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் வெளிப்படுத்தினர்.
மூன்று முயட்சியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய முயட்சியை ஊக்குவிக்குமுகமாக தலா $5000, $3000, $2000 கனடிய வெள்ளி பரிசில்கள் வழங்கப்பட்டன.
1st prize: Approva from Canada
2nd prize: Solve4X from Canada
3rd prize:Zenzpot from Jaffna, Sri Lanka
மேலும் இந்நிகழ்வில் வெற்றிபெற்ற தொழில்முனைவோரின் உரைகள், குழு விவாதங்கள் (Panel discussions), கலந்துரையாடல்கள், தொழில் வழிகாட்டிகளுடன் (Mentor Connect) தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு (Networking ) என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வை CTTC யுடன் CTPA மற்றும் Good News Ventures ஆகிய அமைப்புக்கள் இணைத்து நடத்தியிருந்தன.
தமிழ் தொழில் முனைவோர்களை முதலீட்டார்கள், வழிகாட்டிகள், நிபுணர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தல் என கனடிய வர்த்தக சம்மேளனதின் இம் முயட்சி தொழில் முனைவோர் மற்றும் உலகளவில் உள்ள தமிழ் முதலீட்டார்களுக்குப் பயனளிப்பதாகவும், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் இனிவரும் காலங்களில் அமையும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.