Reading Time: < 1 minute

கியூபெக் பிரீமியர் பிரான்சுவா லுகோ அனைத்து கணிசமான உட்புற நிகழ்வுகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். 
மேலும் COVID – 19 பரவுவதைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே தங்குமாறு மக்களில் பெரும் பகுதியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

  • 250 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து உட்புற –நிகழ்வுகளையும் அரசாங்கம் தடை செய்கிறது 
  • நாட்டிற்கு வெளியில் இருந்து வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். சுகாதார மற்றும் கல்வி முறைகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு இது கட்டாயமாகும்
  • பள்ளிகள் திறந்த நிலையில் உள்ளன, ஆனால் ஒரே அறையில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக்கூடாது
  • காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் எவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
  • வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய எவரும் வீட்டிலிருந்தே வேலை ஸ் செய்யவேண்டும்.
  • 13 நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, 136 நோயாளிகள் இன்னும் விசாரணையில் உள்ளன. இருவர் தற்போது மருத்துவமனையில் உள்ளனர்.
  • உங்களிடம் COVID-19 அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால் மற்றும் ஒரு சுகாதார பராமரிப்பு நிபுணரின் வழிகாட்டுதலை விரும்பினால் 811 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்

COVID-19 பற்றி மேலும் விபரம் தெரிந்துகொள்ள நீங்கள் 1-877-644-4545 என்ற இலக்கத்தை அழைக்கலாம். கியூபெக் அரசாங்கமும் அவர்களின் வலைத்தளத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

Sante Montreal: https://santemontreal.qc.ca/en/public/coronavirus-covid-19/