தேவையானவை :
சிக்கன்-அரைகிலோ
இஞ்சி பூண்டு விழுது-இரண்டு தேக்கரண்டி
வெங்காயம்-1
குடமிளகாய்-1
பச்சைமிளகாய் விழுது-இரண்டு தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
சோளமாவு-அரைக் கோப்பை
சோயா சாஸ் -இரண்டு மேசைக்கரண்டி
உப்ப-தேவைக்கேற்ப
அஜினோமோட்டோ-அரைத் தேக்கரண்டி(வேண்டுமானால் )
கொத்தமல்லி-சிறிது
எண்ணெய்- தேவையானளவு
செய்முறை :
1.சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கவும், ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது, மிளகாய்த்தூள், சோயாசாஸ் உப்பு சேர்த்து கலக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்,
2.கடாயில் எண்ணெயை காயவைத்து சிக்கனைப் போட்டூ பொன்னிறமாக பொரித்து வைக்கவும்,
3.மற்றொரு கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து இஞ்சிபூண்டூ,பச்சைமிளகாய் விழுதை போட்டூ வதக்கி வெங்காயம் குடமிளகாய் போட்டு,சோயாசாஸ்,அஜினொமோட்டோ சேர்த்து வதக்கவும் ,
4.பின்பு அதில் பொரித்த சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும் ,பின்பு ஒரு மேசைக்கரண்டி சோளமாவை நீரில் கரைத்து ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.