Reading Time: < 1 minute
தேவையானவை :
கோழி – அரை கிலோ
வெங்காயம் – 4
இஞ்சி விழுது – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 8
பட்டை- 2
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சததூள் – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை :
- கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்,
- வாணலியில் எண் ணெயை சுடவைத்து பட்டை சோம்பை தாளிக்கவும்.
- பின்பு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்,பிறகு அதில் மஞ்சத்தூள், இஞ்சி , பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
- கோழித் துண்டுகளை போட்டு உப்பை சேர்த்து நன்கு கிளரவும்.அடுப்பை குறைத்து வைத்து கோழி வேகும் வரை சுருள வதக்கி இறக்கவும்.