Reading Time: < 1 minute
தேவையானவை:
கோழிக்கறி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 250 கிராம்
கிராம்பு – 6
தக்காளி – 2
கொத்துமல்லி – சிறிது
அப்பளம் – கொஞ்சம்
உப்பு, எண்ணெய், மைதா கரைசல் – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்புடன் நறுக்கி பொருட்களையும் கோழிக்கறியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
- கறி வெந்ததும் உப்பு சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும்.
- அப்பளத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து எடுத்து வைக்க வேண்டும்.
- அதன்மேல் கறி கலவையை வைத்து முக்கோணமாக மடித்து மைதா கரைசலால் ஓரத்தை ஒட்ட வேண்டும்.
- கறிக்கலவை அனைத்தையும் இதுபோல் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.