Reading Time: < 1 minute
தேவையானவை:
சிக்கன் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பச்சைமிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1
ரொட்டித் தூள் – 25 கிராம்
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
மைதா – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
- சிக்கன், வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு
- உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.
4.இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டிகொள்ளவும்.
- காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும்.