Reading Time: < 1 minuteதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் 42 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக தற்போது அரசாங்க தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றது. ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் குறித்த திட்டங்களை ஜோ பைடன் செயல்படுத்த ஆரம்பித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தூண்டிவிட்டதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் குற்ற விசாரணை என்பது நாட்டின் வரலாற்றில, உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட வேட்டையின் மற்றொரு கட்டம் என ட்ரம்ப் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அவர் ஆற்றிய உரை மற்றும் வெளியிட்ட பதிவுகளே வன்முறைக்கு காரணமென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வொர்த் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணியளவில் சி.டி. மற்றும் சுமார் ஒரு மைல் தொலைவிற்கு இந்த விபத்து பதிவானது. டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் ஆஸ்டின் பகுதிகளில் மோசமான வானிலை நிலவரங்களில் இந்தRead More →

Reading Time: < 1 minuteசீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்ற கருத்தை அங்கு ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு நிராகரித்துள்ளது. வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியமைக்கான வாய்ப்பு மிக-மிகக் குறைவு என சீனா – வுஹான் நகரில் ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார். எனினும் வைரஸ் பரவலின் மூலத்தைக் கண்டறியRead More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடாவில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கனடாவில உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் விவசாய சட்டங்களுக்குRead More →

Reading Time: < 1 minuteமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteமியன்மரில் பத்து லட்சம் தமிழ் பேசும் தமிழர்கள் தமது கலை கலாச்சாரங்களை பேணி வாழ்ந்துவருகின்றார்கள். 3000 க்கும் அதிகமான இந்து கோவில்கள் உள்ள நாடு மியான்மர் என்பது உலக தமிழர்கள் அதிகம் அறியாத ஒன்று. மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்Read More →

Reading Time: < 1 minuteமத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடந்த வியாழக்கிழமை முடித்த நிலையில், தற்போது வுஹானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். எனினும், ஆய்வு நடவடிக்கைகள் குறித்தRead More →

Reading Time: < 1 minuteபிரதமர் லீ சியென் லூங் (சிங்கப்பூர்) தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியைத் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வழி பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார். இன்று தைப்பூசத் திருவிழா, வீரத்தையும் இளமையையும் குறிக்கும் கடவுளான முருகனைக் கொண்டாடும் நாள். பொதுவாகத் தைப்பூசத்தின் போது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால் குடங்களையும், வண்ண வண்ணக் காவடிகளையும் பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது COVID-19Read More →