Reading Time: < 1 minuteசிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது. தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteஉலக அளவில் அதிக கொரோனா மரணங்கள் ஒப்பீட்டு ரீதியில் அதிக உடற்பருமன் கொண்டவர்கள் வாழும் நாடுகளிலேயே பதிவாகியுள்ளதாக உலக உடல் பருமன் கூட்டமைப்பு (World Obesity Federation) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களில் 88 சதவிகிதம் போ் அதிக உடற்பருமன் கொண்ட நாடுகளில் வசிப்போர் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கு மேலானோர் அதிக உடற்பருமன்Read More →

Reading Time: < 1 minuteஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்மூலம், அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அரை மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த புதிய தடுப்பூசி நோய்ப்பரவலை எதிர்த்துப் போராடஉதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 66 விகித செயற்திறன் கொண்ட ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியைRead More →

Reading Time: < 1 minuteஜோன்சன் அண்ட் ஜோன்சன் (Johnson & Johnson) மருந்து நிறுவனம் தாயரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FDA அங்கீகாரம் அளித்துள்ளது. 44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பின்விளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது தடுப்பூசியாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தயாரிப்பு மருந்தை அவசர காலRead More →

Reading Time: 2 minutesஇன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது. குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனிதRead More →

Reading Time: < 1 minuteதென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்வேலி மிகைஸ் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துதெரிவித்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, ‘ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்கதாக விரிவான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப்Read More →

Reading Time: < 1 minuteரைம் (TIME) பத்திரிகையில் உலகின் வளர்ந்துவரும் சிறந்த அடுத்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் (time100 next-2021) ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியத் தமிழ் யுவதி மைத்திரேயி ராமகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார். கனடா – ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகாவைச் சேர்ந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். அவரது குடும்பம் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து கனடவில் குடியேறியுள்ளது. நெட்ஃபிக்ஸ்ஸில் மிண்டி கலிங்கின் “நெவர் ஹேவ் ஐ எவர்” (‘Never Have I Ever’) என்ற பதின்மRead More →

Reading Time: < 1 minuteதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் 42 மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்துள்ளதாக தற்போது அரசாங்க தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் உலகில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்ற பெயரை அமெரிக்கா பெற்றது. ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் குறித்த திட்டங்களை ஜோ பைடன் செயல்படுத்த ஆரம்பித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தூண்டிவிட்டதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியல் குற்ற விசாரணை என்பது நாட்டின் வரலாற்றில, உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட வேட்டையின் மற்றொரு கட்டம் என ட்ரம்ப் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அவர் ஆற்றிய உரை மற்றும் வெளியிட்ட பதிவுகளே வன்முறைக்கு காரணமென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வொர்த் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை 6 மணியளவில் சி.டி. மற்றும் சுமார் ஒரு மைல் தொலைவிற்கு இந்த விபத்து பதிவானது. டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மற்றும் ஆஸ்டின் பகுதிகளில் மோசமான வானிலை நிலவரங்களில் இந்தRead More →

Reading Time: < 1 minuteசீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்ற கருத்தை அங்கு ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு நிராகரித்துள்ளது. வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியமைக்கான வாய்ப்பு மிக-மிகக் குறைவு என சீனா – வுஹான் நகரில் ஆய்வு செய்துவரும் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவின் தலைவர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார். எனினும் வைரஸ் பரவலின் மூலத்தைக் கண்டறியRead More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பிரதமர் மோடி மற்றும் கனடாவில் பணியாற்றும் இந்திய துாதரக அதிகாரிகளுக்கும் கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கனடாவில உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். இந்திய மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் விவசாய சட்டங்களுக்குRead More →