Reading Time: < 1 minuteஇலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கனடாவில் வாழும் இலங்கையர்கள் ‘எமது தாய்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என போராட்டம் நடத்தி வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் மோசடையும் பொருளாதார நிலைமை குறித்து கனடா எச்சரிக்கைவிடுத்துள்ளது. இலங்கைக்கான பயண ஆலோசனையில் கனடா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகள், உணவுகள் எரிபொருட்கள் ,போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என கனடா தெரிவித்துள்ளது. பொருளாதார ஸ்திரதன்மை இன்மை சுகாதார சேவைகள் உட்பட பொதுச்சேவைகள் பாதிக்கப்படும் நிலைமையை ஏற்படுத்தலாம் என கனடா கூறியுள்ளது. அத்துடன் பொருளாதார ஸ்திரதன்மை வளங்கள் குறைந்தளவில் கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்Read More →

Reading Time: < 1 minuteபாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) இன்று மாலை உடல்நலக்குறைவால் இன்று (December 26, 2021) காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார். 2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேகRead More →

Reading Time: 2 minutesஇலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (16) பிற்பகல் கனடா இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை-கனடா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இம்மாத முற்பகுதியில் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கனேடிய உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். கனடா உயர்ஸ்தானிகருடனான இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் மேற்கொள்ளுவதற்கு சாத்தியமான அபிவிருத்திட்டங்கள் குறித்தும், இலங்கையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை அனிதா ஆனந்த பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. கனேடிய இராணுவ உயர்மட்டத்தில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியைக் கையாண்டது குறித்து பல மாதங்களாக விமர்சனங்களை எதிர்கொண்ட முன்னாள்Read More →

Reading Time: < 1 minuteசினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம். கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடியRead More →

Reading Time: < 1 minuteகேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minuteதிருமண நிகழ்வில் புகைப்பட கலைஞருக்கு உணவு , நீராகாரம் கொடுக்காததால் , தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் மணமக்கள் கண் முன்னாடியே அழித்து விட்டு, நிகழ்வை விட்டே புகைப்பட கலைஞர் சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது நண்பனின் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்து கொடுக்க சம்மதித்துள்ளார். அதன் பிரகாரம் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்த போது , அவருக்கு மணமக்கள் குடும்பம் உபசரிப்புக்களைRead More →

Reading Time: 3 minutesபாடகர் வர்ண ராமேஸ்வரன்: இசை அத்தியாயம் சரிந்ததுவே! (செப்டம்பர் 25, 2021 அன்று கொடிய கொரோனா காரணமாக கனடாவில் இறப்பை தழுவிக்கொண்டார்) இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு. ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும்,Read More →

Reading Time: 2 minutesதென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு தலைவர்S. தேவதாஸ் (தாஸ்)416-817-1114 தென்மாட்சி நிறுவனம்Read More →

Reading Time: < 1 minuteதற்கொலை செய்துகொள்ளப்போகிறவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என உங்களிடம் நேரடியாகச் சொல்வதில்லை இந்த அறையில் எனக்கு மூச்சுத்திணறுகிறது என்று சொல்கிறார்கள் கண்ணுக்குத் தெரியாத இரும்புக்கரம் ஒன்று இதயத்தைப் பிசைகிறது என்று சொல்கிறார்கள் மறக்க வேண்டியதை மறக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் அவமானங்கள் முன் மிகவும் கூச்சமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் எனக்குப் பசிக்கவேயில்லை என்று சொல்கிறார்கள் யாரையும் காணப்பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் யாருமில்லாத அறையில் குரல்கள் கேட்கின்றன என்று சொல்கிறார்கள் எனக்குRead More →

Reading Time: < 1 minuteதமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும் மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன்Read More →

Reading Time: 3 minutesபுஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர். ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றிRead More →

Reading Time: 2 minutesஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. 1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதுRead More →

Reading Time: < 1 minuteபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமானRead More →

Reading Time: 2 minutesஇன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது. குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனிதRead More →

Reading Time: < 1 minuteரைம் (TIME) பத்திரிகையில் உலகின் வளர்ந்துவரும் சிறந்த அடுத்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் (time100 next-2021) ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியத் தமிழ் யுவதி மைத்திரேயி ராமகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார். கனடா – ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகாவைச் சேர்ந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். அவரது குடும்பம் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து கனடவில் குடியேறியுள்ளது. நெட்ஃபிக்ஸ்ஸில் மிண்டி கலிங்கின் “நெவர் ஹேவ் ஐ எவர்” (‘Never Have I Ever’) என்ற பதின்மRead More →