Reading Time: < 1 minuteஇந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்திRead More →

Reading Time: < 1 minuteசட்டவிரோதமாக கனடாவுக்கு வர யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடவுச்சீட்டை சமர்ப்பித்த போது, அதில் காணப்பட்ட படத்தில் வேறுபாடு காணப்படுவதை அவதானித்த அதிகாரிகள் அதனை கணினி பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திருகோணமலை நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டவர்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர் அல்லது வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர்கள், 6 மாதங்களுக்குப் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteமே மாதம் முதலாம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்தோடு, மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இருந்து 27,274Read More →

Reading Time: < 1 minuteகனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்., மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்று முன்தினம் இரவே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து, மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். மட்டுவில் பகுதியை சேர்ந்த 22Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவிலிருந்து விடுமுறைக்கு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன் தினம் (20) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைபாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள்Read More →

Reading Time: < 1 minuteதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி,Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதே எண்ணிக்கையலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்குRead More →

Reading Time: < 1 minuteமன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 07 ஆம் திகதியன்று இடம்பெற்றRead More →