Reading Time: < 1 minuteஇலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிலையான வைப்புRead More →

Reading Time: < 1 minute”மத்திய கிழக்கிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த செயற்பாட்டுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகல் எபிடோம் ஹோட்டல் வளாகத்தில் நேற்று அபிமன் 2024 நிகழ்வு நடைபெற்றது.நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.Read More →

Reading Time: < 1 minuteகடந்த முப்பது வருடகால யுத்தத்தின் போது, பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை எனவும், யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்” எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மத்துகம பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்துக்கான ” ஜயகமு ஸ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவுRead More →

Reading Time: < 1 minuteகல்வி, விஞ்ஞானம், கலாசாரம், ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்புத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கல்வி, அறிவியல், கலாச்சாரம், வெகுஜன ஊடகம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளில் முதல் ஒத்துழைப்புத் திட்டத்திற்கான கட்சிகளின் உடன்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சரின் ருமேனியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூவ் பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்றRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை அரசானது பணவீக்கத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3% ஆக இருந்த நிலையில் அது மே 2024 இல்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தாா். இதன்போது மேலதிக வலுசக்தியை இந்தியாவுக்கு விற்பனை செய்வது குறித்து பேசப்பட்டு வருவதாகவும், அதற்காக இந்தியா – இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பது தொடர்பிலானRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான மேலதிக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளப் பெறுவதற்காக, ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கு, வலுவான மற்றும் மூலோபாய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இலங்கைக்கு இன்றியமையாதது என அரசாங்கம் தெரிவித்துள்ளது இதேவேளை ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கிய அங்கத்துவRead More →

Reading Time: < 1 minuteஇந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெற்றது. இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம்Read More →

Reading Time: < 1 minuteயாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்திRead More →

Reading Time: < 1 minuteசட்டவிரோதமாக கனடாவுக்கு வர யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடவுச்சீட்டை சமர்ப்பித்த போது, அதில் காணப்பட்ட படத்தில் வேறுபாடு காணப்படுவதை அவதானித்த அதிகாரிகள் அதனை கணினி பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திருகோணமலை நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டவர்Read More →