Reading Time: < 1 minuteஉள்ளூராட்சிறத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல்Read More →

Reading Time: < 1 minuteநுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள இ.போ.ச.க்கு சொந்தமான டிப்போக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (09) அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இரு மாவட்டங்களில் உள்ள ஏழு டிப்போக்களுக்கு 26 புதிய பேருந்துகள் இதன்போது கையளிக்கப்பட்டன. மேலும் இந்த புதிய பேருந்துகள் கிராமப்புற மற்றும் தோட்டப்புற மக்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த புதியRead More →

Reading Time: < 1 minuteஇந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பீடு செய்யும் என எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கி.மீ. தொலைவில் உள்ளRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்;பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பழமையான வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இந்து கோவில்களை இடித்து, இந்து தமிழ் சமூகத்தின் கலாசார இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். இதுபோன்ற செயற்பாடுகள் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல்Read More →

Reading Time: < 1 minuteபொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால காவலில் வைக்க அனுமதிக்கும் வகையில் இந்த சட்டம் காணப்படுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மிகவும் கடுமையானது என்றும் கூறியுள்ளார். இந்த சட்டமூலத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் நாட்டிற்கும் அதன் மக்கள் மீதும் அன்பு இல்லாதவர்களாக கருதப்படுவார்கள் என்றும்Read More →

Reading Time: < 1 minuteமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அனுப்பிய பணத்தின் அடிப்படையில் மேலதிக கடமைக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.Read More →