Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்Read More →

Reading Time: < 1 minuteஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் தென் மாகாணத்தை பார்வையிட வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் உனவடுன சுற்றுலா வலயத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteதமிழர் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொலைபேசி ஊடாக பிறிதொரு பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்தி கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் தான் அச்சுவேலியை சேர்ந்தவர் என தொலைபேசியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். பெண்ணின் கைது பணம் வாங்கிய போதும் கனடாவிற்கு அனுப்புவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை,Read More →

Reading Time: < 1 minuteநாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பணியகத்தில் பதிவு செய்யாது, வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு, எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்Read More →

Reading Time: < 1 minuteதேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்தல் இந்த வருடம் இடம்பெறுவதற்கு மிகவும் குறுகிய சந்தர்ப்பமே தற்போது இருக்கிறது. தேர்தலை நடத்துவதற்கும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கோட்டை பொலிஸார் இன்று (புதன்கிழமை) காலை மத்திய வங்கிக்கு சென்றுள்ளனர். மத்திய வங்கியின் பல அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பலரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புக் குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தது. உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கியRead More →