Reading Time: < 1 minuteகொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா 12Kg காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும்Read More →

Reading Time: < 1 minute2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார். புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். மேலும், பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteதமிழர் தாயகத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட ஆயர்கள், யாழ்ப்பாணம் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் மற்றும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும், சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்துக்கு யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தமது பூரண ஆதரவைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே அடையாளம் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச்Read More →

Reading Time: 2 minutesஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்களும் திரண்டு, அஞ்சலி செலுத்தியதோடு,Read More →

Reading Time: < 1 minuteவடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்”, “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாதுRead More →

Reading Time: < 1 minuteஉலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நாளை மறுதினம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த உச்சிமாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் திபேத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவும் பங்கேற்பார் என எதிர்பார்ப்பதாகவும், இன்னும் அவரின் வருகைRead More →