Reading Time: < 1 minute12 இலட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்று யாழில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக ஆணையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நபர்களிடமிருந்து 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் சிறுவர்களுக்கான டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு நோய்க்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்த ஆய்வின் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நோய் எதிர்ப்பு, ஒவ்வாமைRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பொருளாதாரத்தினை ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிக் வோல்ஸ், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து இலங்கை மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையில் விவசாயRead More →

Reading Time: < 1 minuteபயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்தியர் நிபுணர்கள் இந்த வருடம் இலங்கைக்கு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்கள் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைசாத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் உமாதேவி (வயது 72) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மணி வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வெளியில் சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை உரும்பிராய் பகுதியில் அவருக்குRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் செயற்பட்டு வரும் ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்பை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் என்ற செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் மற்றுமொரு வேலைத்திட்டமாக இந்த திட்டம் முன்வைக்கப்படுவதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த வாக்கெடுப்பில் அமெரிக்காவில்Read More →

Reading Time: < 1 minuteமின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. மின்சாரத்துறை நிபுணர்கள் உட்பட பொறுப்பான அமைச்சர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்கமைய, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கடன் உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பக்கத்தில்Read More →

Reading Time: < 1 minuteதற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல்Read More →