Reading Time: < 1 minuteபொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால காவலில் வைக்க அனுமதிக்கும் வகையில் இந்த சட்டம் காணப்படுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மிகவும் கடுமையானது என்றும் கூறியுள்ளார். இந்த சட்டமூலத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் நாட்டிற்கும் அதன் மக்கள் மீதும் அன்பு இல்லாதவர்களாக கருதப்படுவார்கள் என்றும்Read More →

Reading Time: < 1 minuteமழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டு ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் கட்டணச் சலுகையை அதிகரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அனுப்பிய பணத்தின் அடிப்படையில் மேலதிக கடமைக்கான சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இவர்கள் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம்Read More →

Reading Time: < 1 minute23 வருட சிறைவாசத்தின் பின்னர் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலையான ஒரு வாரத்திற்குள் தனது நீண்டகால காதலியை மணந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன், ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விழாவில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். இளங்கேஸ்வரனின் காதலி 23 ஆண்டுகளாக இலங்கேஸ்வரன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை காத்திருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது பகுதிகளிலும் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகRead More →

Reading Time: < 1 minuteமின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கையிருப்பு தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள்Read More →