Reading Time: < 1 minuteகனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்கம், இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் முறைகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை வழியாக கனடா செல்வதற்காக இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை (1) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்தில் கே. ஜோர்ஜ் (65) என்ற இந்தியப் பிரஜையே உயிரிழந்துள்ளார். விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteவாரத்தின் ஏழு நாட்களும் யாழ். விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் உதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனRead More →

Reading Time: < 1 minuteசிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான பல்வேறு முரண்பாடுகளுக்கு அடிப்படையான அறிக்கைகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய சந்தேகRead More →

Reading Time: < 1 minuteபங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்ற பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக்கொண்டது. பெற்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடுRead More →

Reading Time: < 1 minuteயாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை தொடரவுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர். இதன்போது சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கு சென்றும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteவங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்ததாகவும் இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்கRead More →